அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
என் இறைவா! கல்விஞானத்தை எனக்கு அதிகமாக்குவாயாக! என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக! (திருக்குர்ஆன் 20:114).
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்”. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:ஸஹீஹ் முஸ்லிம். ஹதீஸ் எண்: 5231